sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

லாரிகளில் சிக்கி நசுங்கிய வேன்"லிப்ட்' பயணிகள், டிரைவர் பலி

/

லாரிகளில் சிக்கி நசுங்கிய வேன்"லிப்ட்' பயணிகள், டிரைவர் பலி

லாரிகளில் சிக்கி நசுங்கிய வேன்"லிப்ட்' பயணிகள், டிரைவர் பலி

லாரிகளில் சிக்கி நசுங்கிய வேன்"லிப்ட்' பயணிகள், டிரைவர் பலி


ADDED : ஆக 06, 2011 10:54 PM

Google News

ADDED : ஆக 06, 2011 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு லாரிகளுக்கு இடையே ஆம்னி வேன் சிக்கி, மூன்று பேர் பலியாகினர்.

கோவை மாவட்டம் கிணத்துகடவை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமார், 30. ஆம்னி வேனில், மதுரை உசிலம்பட்டியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்றார். உசிலம்பட்டியில் மளிகைக் கடை நடத்திய மோகன், 55, செந்தில்வேல், 35, இருவரும் ஒட்டன்சத்திரம் செல்ல 'லிப்ட்' கேட்டு வேனில் ஏறினர்.

நள்ளிரவு 12 மணிக்கு, ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை ரயில்வே கிராசிங் அருகே, ஒரு டேங்கர் லாரி முன்னால் சென்றது; பருப்பு மூடை ஏற்றிய லாரி, வேனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தது. வேகத்தடைக்காக, டேங்கர் லாரி டிரைவர் மாணிக்கம், திடீர் 'பிரேக்' போட்டார். இதில், ஆம்னி வேன், லாரியின் பின்புறம் மோதியது; பின்னால் வந்த லாரியும், வேனில் மோதியது. இதில் வேனில் பயணித்த மூவரும் அதே இடத்தில் பலியாகினர்.

இன்ஸ்பெக்டர் இளவரசு, லாரி டிரைவர்கள் மாணிக்கம், லோகநாதனை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us