ADDED : ஆக 19, 2011 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு
திட்டத்தில், 1000 பயனாளிகளை தேர்வு செய்யும் பணி, ஊராட்சிகளில் நடக்கிறது.
புதிய வீடுகள் 200 சதுர அடி பரப்பில் பயனாளிகளே கட்டிக்கொள்ளவேண்டும். இதற்காக, அரசு 75 ஆயிரம் ரூபாய் மானியம் நேரடியாக வழங்கும்.
கூடுதலாக ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை கட்ட 2200 ரூபாய் மானியம்
வழங்கப்படும். இதில் 60 சதவீதம், ஆதிதிராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
விருப்பமுள்ளவர்கள் இடத்தின் பட்டா மற்றும் ரேஷன் கார்டு நகலுடன்,
ஊராட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு
விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.