/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆரஞ்சு விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
/
ஆரஞ்சு விலை உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 04, 2011 09:44 PM
தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் கோடை ஆரஞ்சு சீசன்
களைகட்டியுள்ளது.
விளைச்சல் குறைவாக இருந்தபோதும், விலை அதிகரித்துள்ளதால்
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில்
துவங்கும் கோடை ஆப் சீசன் ஒருங்கிணைந்த பூக்களின்றி ஜூலை மற்றும் ஆகஸ்ட்
துவக்கத்தில் தொடங்கியது. தொடர் மழை காரணமாக பழங்கள் விரைவில் பறிக்க
தயாராகியும், உதிர்ந்து வீணாகும் நிலையும் உருவானது. எதிர்பார்த்ததைவிட
விளைச்சல் குறைவாக இருந்தபோதும், விலைஉயர்வால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர். பறிக்கப்படும் பழங்கள் மதுரை, திருச்சி
மார்க்கெட்களுக்கு அனுப்படுகிறது. துவக்கத்தில் ஒரு கிலோ 25 முதல் 30
ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், ஆப் சீசன் நிறைவையடுத்து வரத்து
குறைந்ததால், தற்போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கிறது. முழுஅளவிலான சீசன்
நவம்பர் மாதத்தில் துவங்கி பிப்ரவரி வரை நீடிஙக்கும்.

