sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்

/

அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்

அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்

அரசு கேபிள் "டிவி' க்கு அதிக தொகை வசூல்


ADDED : அக் 04, 2011 11:37 PM

Google News

ADDED : அக் 04, 2011 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பிற்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் 'டிவி' இணைப்பு, செப்., 2 ல் நடைமுறைக்கு வந்தது. சில வாரம் கட்டண சேனல் இன்றி ஒளிபரப்பப்பட்டு, பின் சேர்க்கப்பட்டன. அரசு நிர்ணயித்த 70 ரூபாய் மட்டுமே இணைப்புதாரர்களிடம் பெறவேண்டும். இதில், 50 ரூபாயை ஆப்பரேட்டர்கள் எடுத்துக்கொண்டு, 20 ரூபாயை அரசுக்கு செலுத்தினால் போதும் என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், 'ஒளிபரப்பு செலவுகளை சமாளிக்க முடியவில்லை,' என, சிறிய ஆப்பரேட்டர்கள் புலம்புகின்றனர். சிலர், நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.'கட்டண சேனல் ஒளிபரப்புகிறோம்,' எனக்கூறி 130 ரூபாய் வரை கேட்கின்றனர். ஆனால், '70 ரூபாய்க்கு மேல் தரமுடியாது,' என, மக்கள் கூறுகின்றனர். சில ஆப்பரேட்டர்கள் மிரட்டுவதால், கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us