ADDED : செப் 25, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
நத்தம், செப்.26
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் -நத்தம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் பிரேமா தலைமை வகித்தார். செயலாளர் கலைச்செல்வி, பொருளாளர் சுதா முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் பாண்டியன், நிர்வாகி ஸ்டாலின் உட்பட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
