ADDED : செப் 25, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
நத்தம், செப்.26-
நத்தத்தில் மா.கம்யூ., கட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாலுகா செயலாளர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராணி, மாவட்ட குழு உறுப்பினர் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தனர்.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தாலுகா குழு உறுப்பினர்கள் சுமதி, லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
