ADDED : செப் 25, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
பழநி, செப்.26-
பழநி அடிவாரம் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பழநி அடிவாரம் பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் விடுமுறை நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அடிவாரம், அய்யம்புள்ளி ரோடு, குறவன்பாறை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சில வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.
