/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு மதுரை கோட்ட மேலாளர் தகவல்
/
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு மதுரை கோட்ட மேலாளர் தகவல்
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு மதுரை கோட்ட மேலாளர் தகவல்
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு மதுரை கோட்ட மேலாளர் தகவல்
ADDED : பிப் 04, 2024 04:47 AM
திண்டுக்கல் : ''அம்ரித் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக ,''மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா நடைமேடையை நவீனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அம்ரித் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்வது தொடர்பான வரைபடத்தையும் பார்வையிட்டார்.
வரைபடத்தில் ஏதேனும் சிறப்பு அம்சங்கள் சேர்க்க அது தொடர்பான கருத்துகளை தெரிவிக்க ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
திருச்சி ரோடு என்.ஜி.ஓ. காலனி மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார். அவருடன் வேலுச்சாமி எம்.பி. , மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா உடன் சென்றனர்.இதை தொடர்ந்து அவர் கூறியதாவது: அம்ரித் திட்டத்தின் கீழ் விரைவில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் வாகன நிறுத்தம், அதிக இடவசதியுடன் லிப்ட் அமைக்கப்பட உள்ளன. இதுமட்டுமின்றி 2-வது, 3-வது நடைமேடையில் குளிர்சாதனம், சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் காத்திருப்பு அறைகளும் கட்டப்பட உள்ளன. 4-வது, 5-வது நடைமேடையில் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.