/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஒரே நாளில்220 மி.மீ மழை பதிவு
/
திண்டுக்கல்லில் ஒரே நாளில்220 மி.மீ மழை பதிவு
ADDED : நவ 04, 2024 07:16 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் ஒரே நாளில் 220 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் துவக்கம் முதலே தொடர்ந்து மழை பெய்கிறது. காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் பெய்யும் மழை சீரான இடைவெளியில் இரவு வரை நீடிக்கிறது.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில், மதியத்திற்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு சீரான இடைவெளியில் விடாத மழை இரவு வரை நீடித்தது. கொடைக்கானல், நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஒரே நாளில் 220.30
மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62.40 மி.மீ., நத்தத்தில் 23.50 மி.மீ., வேடசந்துாரில் 18.80 மி.மீ., என மழையளவு பதிவாகியுள்ளது.