/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 5 நாட்களில் 907 மில்லி மீட்டர் மழை பதிவு
/
திண்டுக்கல்லில் 5 நாட்களில் 907 மில்லி மீட்டர் மழை பதிவு
திண்டுக்கல்லில் 5 நாட்களில் 907 மில்லி மீட்டர் மழை பதிவு
திண்டுக்கல்லில் 5 நாட்களில் 907 மில்லி மீட்டர் மழை பதிவு
ADDED : அக் 13, 2024 05:03 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சீரான இடைவெளியில் பெய்த மழையால் 5 நாட்களில் மட்டும் 907 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
மழைகாலம் தொடங்கிய பின்னும் திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் தொடர்ந்த நிலையில் கொடைக்கானல், பழநி, நத்தம் என மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடிலில்லை இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்படி அக் .7 ல் சாரலுடன் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து சீரான இடைவெளியில் அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது.காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 1 :00 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. மாலை 4:00 மணி முதல் இரரவு 9:00 மணி வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளங்கள், அணைகள் நிரம்பி வருகிறது.
மழை நேரங்களில் மரங்கள் , மின்ஒயர்கள் விழுந்து சேதம் ஏற்பட்டாலும் மின் துறையினர் அதனை கண்காணித்து சீரமைத்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் 5 நாட்களில் மாவட்டத்தில் 907 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.