/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை' சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

ADDED : ஏப் 13, 2025 03:26 AM
திண்டுக்கல்: ''முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அவரது கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் யாரும் இல்லை,'' எனஅ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அவரது கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் யாரும்இல்லாததால் தொடர்ந்து தவறாக பேசுகிறார்கள்.
பெண்கள் குறித்து அமைச்சர்கள் இழிவாக பேசுவதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வளர்மதி, கோகுல இந்திராமுன்னிலையில் சென்னையில் ஏப். 16ல் மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க., அரசு சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு வெளிப்படையாக அ.தி.மு.க., ஆதரவு அளித்தது.முஸ்லிம்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளோம்.
இந்த விஷயத்தில் ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் விளம்பரம் தேடுகின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்றார்.