/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடைப்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் அணி வெற்றி
/
கூடைப்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் அணி வெற்றி
ADDED : ஜன 18, 2025 07:29 AM
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு யங் ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இப் போட்டியில் திண்டுக்கல் ஜி. டி. என். கல்லுாரி, வத்தலக்குண்டு யங் ஸ்டார் கூடை பந்தாட்ட கழக அணிகள் மோதியதில் திண்டுக்கல் ஜி. டி. என். அணி முதலிடம் பெற்றது.
மூன்றாம் இடத்தை கோவை அணி பெற்றது. பரிசுகளை தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் கனி குமார், நகர செயலாளர் சின்னத்துரை வழங்கினர். பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், முன்னாள் துணைத் தலைவர் ரவி, சந்தோஷ் காஸ் உரிமையாளர் சந்தோஷ் குமார் பங்கேற்றனர்.