/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சென்னை ஐ.டி ., பெண் ஊழியர் புகாரில் திண்டுக்கல் வாலிபர் கைது
/
சென்னை ஐ.டி ., பெண் ஊழியர் புகாரில் திண்டுக்கல் வாலிபர் கைது
சென்னை ஐ.டி ., பெண் ஊழியர் புகாரில் திண்டுக்கல் வாலிபர் கைது
சென்னை ஐ.டி ., பெண் ஊழியர் புகாரில் திண்டுக்கல் வாலிபர் கைது
ADDED : டிச 29, 2024 04:49 AM
திண்டுக்கல்: சென்னை ஐ.டி., பெண் ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து,பணமும் பறித்து ஏமாற்றிய புகாரில் திண்டுக்கல் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த சென்னையில் பணியாற்றும் ஐ.டி.,ஊழியர் சிவதுர்கா கொடுத்த மனுவில், திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த வாலிபர் நவநீத கிருஷ்ணன் ,நானும் காதலித்தோம்.
திருமணம் செய்வதாக கூறியதால் கேட்கும் போதெல்லாம் என இதுவரை ரூ.9 லட்சம் கொடுத்துள்ளேன். அவர் அழைக்கும் போதெல்லாம் மதுரை,திண்டுக்கல் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கினேன். அப்போது எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார். அவரது பேச்சில் வித்தியாசம் தெரிந்ததால் அவரது பெற்றோரை தொடர்பு கொண்டபோது அவர்களும் என்னை மிரட்டினர். அவரை பற்றி விசாரித்தபோது என்னை போல் பல பெண்களை ஏமாற்றியது தெரிந்தது. போலீசில் புகாரளித்தேன். அதை வாபஸ் பெறச்சொல்லி பல மிரட்டல்கள் வருகிறது.
எனக்கு பாதுகாப்பு வழங்கி என்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணனை 29. திண்டுக்கல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

