/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலையில் அனுமதியற்ற மது விற்பனை "ஜோர்' : ஆளுங்கட்சிக்குள் "கசமுசா'
/
மலையில் அனுமதியற்ற மது விற்பனை "ஜோர்' : ஆளுங்கட்சிக்குள் "கசமுசா'
மலையில் அனுமதியற்ற மது விற்பனை "ஜோர்' : ஆளுங்கட்சிக்குள் "கசமுசா'
மலையில் அனுமதியற்ற மது விற்பனை "ஜோர்' : ஆளுங்கட்சிக்குள் "கசமுசா'
ADDED : ஜூலை 29, 2011 11:06 PM
தாண்டிக்குடி : கொடைக்கானல் மலை கிராமங்களில் போலீசாரின் ஆசியுடன், அனுமதியின்றி மது விற்பனை நடக்கிறது.
ஆளுங்கட்சியினரிடையே மது விற்பனை செய்வதில் போட்டி எழுந்துள்ளது. கொடைக்கானல் மலையில் 15 ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆறு டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளன. மலை கிராமதினர் மது குடிக்க, டாஸ்மாக் கடைகளுக்கு வருவது சிரமம். எனவே ஆங்காங்கே அனுமதியின்றி மதுவிற்பனை கொடிகட்டி பறக்கிறது.இது போன்ற விற்பனை செய்வோர், போலீசாரின் நடவடிக்கையை தவிர்க்க, ஆளுங்கட்சியினரின் ஆசி தேவை. கடந்த ஆட்சியில் விற்பனையில், ஈடுபட்ட தி.மு.க., வினர், தற்பாது விற்பனையை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கீழ்மலை, மேல்மலை பகுதியில் மது விற்க எம்.எல்.ஏ., ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஆசியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.ஆனால், 'குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் தான், அ.தி.மு.க.,வினர் விற்பனையில் ஈடுபட முடியும்,' என, கட்சி நிர்வாகிகள் சிலர், வேணுகோபாலு எம்.எல்.ஏ., (அ.தி.மு.க.,) ஆசியுடன், பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.'சொந்த கட்சிக்காரர்களிடமே சம்பாதிக்க பார்க்கின்றனர்,' என, கட்சி தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.பூலத்தூர் பகுதி அ.தி.மு.க., வினர் கூறியது:மலைப்பகுதியில் மது விற்பனைக்கு, எம்.எல்.ஏ., வின் நம்பிக்கைக்குரிய ஆயக்குடி அ.தி.மு.க., பிரமுகர் ஒருவரின் ஆசி தேவை. விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும், என்றனர்.தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கூறுகையில், ''அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அரசியல் தலையீட்டால், எங்களுக்கு தீராத தலைவலி ஏற்பட்டுள்ளது,'' என்றார்.எம்.எல்.ஏ., கூறுகையில், ''மது விற்போர் குறித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி., யிடம் வலியுறுத்தியுள்ளேன். இதில் என் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது தி.மு.க., வினரின் திட்டமிட்ட சதி. இது பழநி முருகனுக்கே வெளிச்சம்,'' என்றார்.