ADDED : ஜூலை 29, 2011 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் போக்குவரத்து வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மதுரை அழகர்கோவில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், தேனி மாவட்டம் உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, தேனி, சின்னமனூர், கம்பம், சுற்றியுள்ள கிராமத்தினர் வசதிக்காக, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில்களில் பக்தர்களுக்கு உதவ, போக்குவரத்து கழகம் சார்பில் வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.