sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மணல் கொள்ளையர் மீது நடவடிக்கை அதிகாரிகள் கைகோர்க்க வேண்டும்

/

மணல் கொள்ளையர் மீது நடவடிக்கை அதிகாரிகள் கைகோர்க்க வேண்டும்

மணல் கொள்ளையர் மீது நடவடிக்கை அதிகாரிகள் கைகோர்க்க வேண்டும்

மணல் கொள்ளையர் மீது நடவடிக்கை அதிகாரிகள் கைகோர்க்க வேண்டும்


ADDED : செப் 06, 2011 12:05 AM

Google News

ADDED : செப் 06, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : கடந்த தி.மு.க.,ஆட்சியில், நில மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதே போல மணல், மரம் உள்ளிட்ட பொது சொத்தை பகிரங்கமாக கொள்ளையடித்தவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆட்சியில் ஆளும்கட்சியினர், தங்களது அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு நில, கட்டட மோசடிகளில் ஈடுபட்டனர். தற்போது இவை வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. முன்னாள் அமைச்சர் முதல், நகரம், வட்டம் வரை, தொடர்ந்து கைதாவது வாடிக்கையாக உள்ளது.கனிமவள கொள்ளை: நில மோசடியில் ஈடுபட்ட இவர்கள் மட்டுமின்றி, பகுதி வாரியாக உடன்பிறப்புகள் பலர், குட்டி ராஜாக்களை போல, கேட்பார் யாருமின்றி மணல், மரம் கடத்தலில் ஈடுபட்டனர். இவர்கள் டிராக்டர், டிப்பர் வாகனங்களில் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் புனை பெயர்கள், படங்களை போட்டு கொண்டு, தனி ராஜாங்கம் நடத்தினர். பொது சொத்தை திருடுகிறோம் என்ற கூச்சம் சிறிதுமின்றி, பகிரங்கமாக கடத்தி சென்றனர். சாதாரண நிலையில் இருந்த மணல் கொள்ளையர்கள் பலர், லட்சாதிபதி ஆகியுள்ளனர். முன்வருமா? பொது சொத்தை கொள்ளையடித்து, இயற்கை வளத்தை சுரண்டியவர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். இந்த நடவடிக்கையில் அரசு இறங்கினால், மற்றவர்களுக்கும் பாடமாக அமையும். வரும் காலத்தில் கனிம வள கொள்ளையை பெருமளவு தடுக்க முடியும். இயற்கை வளத்தை காத்த பெருமையும் அரசுக்கு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us