sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய்கள் கருத்தடைக்கு நகராட்சி கைவிரிப்பு

/

நாய்கள் கருத்தடைக்கு நகராட்சி கைவிரிப்பு

நாய்கள் கருத்தடைக்கு நகராட்சி கைவிரிப்பு

நாய்கள் கருத்தடைக்கு நகராட்சி கைவிரிப்பு


ADDED : செப் 07, 2011 11:17 PM

Google News

ADDED : செப் 07, 2011 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய, நகராட்சியினர் நிதி ஒதுக்கவில்லை.

ஒரு ஆண்டாக கு.க., நடக்காததால், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் 2009 ல், 5,000 இருந்த நாய்களின் எண்ணிக்கை தற்போது 7,000 என, அதிகரித்துள்ளது. குளங்கள், பொது இடங்களில் கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகளை தேடிச்செல்லும் நாய்கள், அப்பகுதியினரை கடிக்கின்றன. நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த நகராட்சியினர், கருத்தடை திட்டத்தை அமல்படுத்தியது. நாய் ஒன்றுக்கு 445 ரூபாய் வழங்கப்படுகிறது. இவற்றில் தலா 50 சதவீதம் மத்திய அரசும், நகராட்சி நிர்வாகமும் தர வேண்டும். இதற்கான இட வசதியை நகராட்சி நிர்வாகம் தர வேண்டும்.நிறுத்தம்: கடந்த அக்டோபர் முதல், நகராட்சி நிர்வாகம் அளிக்கும் நிதி நிறுத்தப்பட்டதால், கருத்தடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: மத்திய அரசு நிதி வராததால், கருத்தடை நிறுத்தப்பட்டுள்ளது. கருத்தடை மையத்திற்கு அனைத்து வசதிகள் செய்தும், நிதி கிடைக்கவில்லை, என்றார்.விலங்குகள் நல அலுவலர் பனிமா கூறியது: நகராட்சி நிர்வாகம் நிதியை தரவில்லை. இதனால் மத்திய அரசு நிதியை எதிர்பார்த்துள்ளோம். தற்போதுவரை 1,260 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. பிரச்னை உள்ள பகுதிகளுக்கு சென்று நாய்களை பிடித்து கருத்தடை செய்து வருகிறோம். ஒரு நாய்க்கு 445 ரூபாய் போதாது. இதற்கு 1,000 ரூபாய் வரை தேவைப்படும். இதற்கான செலவுகளை நாங்கள் தான் செய்கிறோம். நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது, என்றார்.








      Dinamalar
      Follow us