/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மிரட்டலுக்கு பயந்து தற்கொலை முயற்சி
/
மிரட்டலுக்கு பயந்து தற்கொலை முயற்சி
ADDED : செப் 19, 2011 10:36 PM
பழநி : கள்ளக்காதலன் மிரட்டியதால், பழநியைச் சேர்ந்த பெண், தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதால் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழநி இந்திராநகரைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி,37. இவருக்கும், பூங்கா ரோட்டைச் சேர்ந்த நாகராஜனுக்கும் மூன்று ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், நாகராஜனுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதனை திருப்பித் தராமல் ஏமாற்றிய நாகராஜன், மேலும் பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளார்.இருவருக்கும் உள்ள தொடர்பை வெளியில் சொல்லிவிடுவதாக, நாகராஜன் மிரட்டியுள்ளார். இதனால், ராஜராஜேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயங்களுடன், பழநி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது வாக்குமூலத்தின்படி, பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.