ADDED : செப் 19, 2011 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : உயிர் உர பொட்டலங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதாக வடமதுரை வேளாண்மை உதவி இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் 25,000 உயிர் உர பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் தன்மை கெடாமல், சத்துக்களை எடுத்து வேர்கள் மூலம் செடிகளுக்கு வழங்கி மகசூலை கூட்ட வழி செய்கிறது. இவ்வகை உயிர் உரங்களை உரிய காலத்தில் பெற்று விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இவ்வாண்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்ட்டீரியா பொட்டலங்கள் புதிதாக பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மானியத்தில் உயிர் உரங்கள் பெற்று மானாவாரி சாகுபடியில் செலவீனத்தை குறைக்கலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்,' என்றார்.