ADDED : செப் 21, 2011 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : 58 வயது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சாந்தி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள். திருச்சி அரசு பள்ளியில் ஆயாவாக உள்ளார். இவர், திண்டுக்கல் மகளிர் போலீசில் அளித்துள்ள புகார்:கணவர் காளிமுத்துவுடன், 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அவரை திருமணம் செய்யும் நோக்கில், எனது மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 15 பவுன் நகையை திருடிசென்று விட்டார். சம்பள பணத்தை கேட்டும், வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துகிறார் என, கூறியிருந்தார். காளிமுத்துவை, போலீசார் கைது செய்தனர்.