/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரம்மா குமாரிகளின் தீப தியானம்
/
பிரம்மா குமாரிகளின் தீப தியானம்
ADDED : மார் 18, 2024 07:01 AM

சாணார்பட்டி : சாணார்பட்டி மேட்டுக்கடை பிரம்மா குமாரிகள் சக்தி சரோவர் தபோவனத்தில் 88வது சிவ ஜெயந்தி, மகா சிவராத்திரி விழா தீப தியான நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வைத்தீஸ்வரர் ஜோதிலிங்க தரிசனத்தை தொடங்கினார். பிரம்மா குமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜயோகினி, பிரம்மா குமாரி உமா,பிரம்மா குமாரி செந்தாமரை பேசினர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 500க்கு மேற்பட்ட ஆத்மா தீபங்கள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டு, தியான பயிற்சியும் நடந்தது.
மார்ச் 18 முதல் வரும் மார்ச் 24 வரை ராஜயோக தியான பயிற்சி முகாம் நடக்கிறது. நிறைவாக பிரம்மா குமாரி ராணி நன்றி கூறினார். சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி பங்கேற்றார்.

