/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலங்கலான குடிநீர் சப்ளையால் நோய்தொற்று
/
கலங்கலான குடிநீர் சப்ளையால் நோய்தொற்று
ADDED : ஆக 21, 2025 08:30 AM

பழநி : குடிநீர் கலங்களாக துர்நாற்றத்துடன் வருவதால் பழநி நகராட்சி 8 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேற்குரத வீதி, ஆரியர் தெரு, மங்கலம் தெரு, நடுத்தெரு, பச்சமுத்து சந்து,அய்யனாரப்பன் சந்து, பழனிச்சாமி வீதி, திரு.வி.க வீதி, முத்துலிங்கசாமி சந்து பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குடிநீர் பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
வார்டு அதிக சந்துகளுடன் கோயில்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். இங்கு போலீசார் ரோந்து பணியையும் தீவிரபடுத்த வேண்டும். மேற்கு ரத வீதியில் தண்ணீர் தொட்டி அருகே புதர் மண்டி உள்ளதால் சுகாதாரத் கேடுடன் கொசுத்தொல்லை அதி கரிக்கிறது.
நோய் தொற்று அபாயம் சித்ரா, குடும்பத் தலைவி,முத்துலிங்க சுவாமி சந்து: குடிநீர் குழாயில் வரும்போது முதலில் பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது. அதன் பின் தண்ணீர் தெளிவாக வந்தாலும் சாக்கடை நீர் கலந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. நோய் தொற்று அபாயமும் உருவாகிறது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்களாலும் அவதி சதீஷ், வியாபாரி, தியாகி லட்சுமிபதி சந்து : நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. டூவீலர்களில் செல்லும் போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
தினமலர் செய்தியால் பணி இந்திரா, கவுன்சிலர் (தி.மு.க.,) : குடிநீரில் சாக்கடை கலந்து வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். விரைவில் சரி செய்யப்படும். புதிய ரேஷன் கடை கட்டபட்டுஉள்ளது. நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. நாய் தொல்லை, கண் காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன். தினமலர் நாளிதழில் வெளிவந்த அங்கன்வாடி மையம் சேதம் குறித்த செய்தியால் அங்கன்வாடி மையப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.

