/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 20, 2024 06:09 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உட்பட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பெட்ரோல் ஸ்கூட்டர், பசுமை வீடு , வங்கிக்கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 110 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.