ADDED : ஜூலை 09, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுாரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய மாநாடு நடந்தது.
மாநில தலைவர் வில்சன், மாவட்ட செயலாளர் பகத்சிங், தலைவர் ஜெயந்தி பங்கேற்றனர். ஒன்றிய தலைவராக சரவணக்குமார், செ யலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக பாக்கியலட்சுமி தேர்வாகினர். பேரூராட்சி பகுதியிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திர மாநிலம் போல உயர்த்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.