/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரைப்பாலம் நடுவில் உருவான பள்ளத்தால் விபரீதம்
/
தரைப்பாலம் நடுவில் உருவான பள்ளத்தால் விபரீதம்
ADDED : ஆக 13, 2025 02:11 AM

குப்பையை குவித்து தீ
திண்டுக்கல் - திருச்சி ரோடு ரயில் மேம்பாலத்தில் இருந்து காந்திஜி நகர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பையை குவித்து அகற்றாமல் இரவு நேரங்களில் தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .மகேந்திரன் திண்டுக்கல்.
................---------வீட்டின் சுவரில் உரசும் மின் கம்பி
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதுார் ராஜீவ் காந்தி தெருவில் வீட்டின் சுவரில் மின் கம்பிகள் உரசுவதால் விபத்து அபாயம் உள்ளது. காற்றடிக்கும் நேரங்களில் தீ பொறியும் ஏற்படுகிறது. இதைசரி செய்ய வேண்டும். குமாரசாமி,ரவுண்ட்ரோடு புதுார்.
............---------ஆக்கிரமிப்பை அகற்றலாமே
ஒட்டன்சத்திரம் அருகே கே. கீரனுார் காளியம்மன் கோயில் தெருவில் ரோட்டை ஆக்கிரமித்து வீட்டு படிகள் கட்டி உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் செல்லாமல் தேங்கி குளம் போல் நிற்கிறது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.ராமச்சந்திரகலா,கே. கீரனுார்.
.........---------
ரோட்டில் ஓடும் கழிவு நீர்
திண்டுக்கல் நாகல் நகர் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதி ராஜலட்சுமி நகர் செல்லும் ரோட்டில் கழிவுநீர் செல்வதால் ரோடு சேதடைந்துள்ளது . அப்பகுதியில் நடந்து செல்வோரும் பாதிக்கின்றனர். இதை சரி செய்ய வேண்டும்.வசந்தகுமார் ,நாகல்நகர்.
........----------
சாய்ந்த நிலையில் மின் கம்பம்
சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி அருகே கூத்தாம்பட்டியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் இதை மாற்றி அமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வம், சின்னகோம்பைபட்டி.
.........----------சாக்கடை பாலத்தில் பள்ளம்
பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சி பின்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை பாலம் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காங்கிரீட் கம்பியும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது . பாலத்தை சரி செய்ய வேண்டும்.முகமது ,ஆயக்குடி.
............----------குப்பையால் சுகாதாரக்கேடு
பழநி பாண்டியன் நகர் பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பல நாட்களாக அள்ளாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால் இதை
உடனுக்குடன் அகற்ற வேண்டும்.முகமது ஜின்னா, மானுார்.
..........----------