/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த டிஸ்கோ கத்தரிக்காய்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த டிஸ்கோ கத்தரிக்காய்
ADDED : டிச 30, 2024 06:31 AM

ஒட்டன்சத்திரம் : தொடர்ந்து பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்துக்குறைந்ததால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரிக்காய் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.20 க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் டிஸ்கோ கத்தரிக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டுக்கு வரத்து அதிகம் இருந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ டிஸ்கோ கத்தரிக்காய் ரூ.15க்கு விற்றது. தற்போது பெய்த மழையால் செடிகளில் இருந்த பூக்கள் அழுகி, நோய் தாக்குதலுக்கு ஆளானதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து மூன்றில் இரண்டு பங்காக குறைந்தது. இதனால் விலை கிலோவிற்கு ரூ.5 அதிகரித்து ரூ.20 க்கு விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்,'' மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது,'' என்றார்.