/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று
/
தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று
ADDED : பிப் 03, 2025 05:53 AM

கட்டட கூரை சேதம் : பழநி அருகே மானுார் குழந்தைகள் மைய கட்டட கூரை சேதம் அடைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் குழந்தைகள் பாதிக்கின்றனர்.வெயில் உள்ளே வருவதால் குழந்தைகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
--தங்கராஜ், மானுார்.
சேதமான கம்பங்கள் : திண்டுக்கல் முருகபவனம் வேளாங்கண்ணி மில் தெற்கு பகுதி டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் சேதமடைந்து காங்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது. விபத்து அபாயம் உள்ளதால்பலரும் அருகில் செல்ல அச்சப்படுகின்றனர் .இதைமாற்றி அமைக்க வேண்டும்.
-சு.மதுரைவீரன், திண்டுக்கல்.
குடிநீர் குழாயில் உடைப்பு : நிலக்கோட்டை - செம்பட்டி ரோடு சின்னாளபட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பல மாதங்களாக வீணாகிறது.ரோட்டில் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது .குழாய் உடைப்பு பகுதியை சரி செய்ய வேண்டும்.
-ரமேஷ், நிலக்கோட்டை.
உபயோகமற்ற சாய்வு தளம் : எரியோடு புங்கம்பாடி பிரிவு பயணியர் நிழற்கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளத்தை பயன்படுத்த முடியாதபடி உள்ளது.இதனை சீரமைப்பு செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---
-ராமன், எரியோடு.
மின்கம்பத்தை சூழந்த செடிகள் : அம்பாத்துரை ரயில்வே கேட் அருகே சாமியார்பட்டியில் மின்கம்பம் முழுவதும் செடிகள் மறைத்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் இருளில் மக்கள் பாதிக்கின்றனர். மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.
-முருகன், அம்பாத்துரை.
நடைபாதையில் குப்பை : திண்டுக்கல் அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலத்தில் இருபுற நடைபாதையில் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், அனுமந்த நகர்.
தெருவில் ஓடும் சாக்கடை : சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சி கோட்டைக்காரன்பட்டியில் சாக்கடை தண்ணீர் தெருவில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் , சிறுவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
-சரவணகுமார், ஒத்தக்கடை.

