/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவு நீர் தேக்கத்தால் உருவாகும் கொசுக்களால் நோய் தொற்று
/
கழிவு நீர் தேக்கத்தால் உருவாகும் கொசுக்களால் நோய் தொற்று
கழிவு நீர் தேக்கத்தால் உருவாகும் கொசுக்களால் நோய் தொற்று
கழிவு நீர் தேக்கத்தால் உருவாகும் கொசுக்களால் நோய் தொற்று
ADDED : ஆக 29, 2025 03:28 AM

மருத்துவமனை முன்பு கழிவு நீர்
திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனை முன்பு மழை பெய்தாலே மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது . மருத்துவமனைக்கு சென்றுவரவும் சிரமம் ஏற்படுகிறது . ரோட்டை உயர்த்த நடவடிக்கை வேண்டும்.சரண்யா, திண்டுக்கல்.
...........---------
குப்பையால் தொற்று
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பையால் துர்நாற்றம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ரோடு முழுவதும் சிதறி கிடக்கும் இவை பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது .குப்பையை அகற்ற வேண்டும்.ரஞ்சித்குமார், திண்டுக்கல்.
.................----------
சரக்கு வாகனத்தில் ஆட்கள்
ஒட்டன்சத்திரத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது தொடர்கதையாக உள்ளது . இதோடு அதிக வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது . ஆட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும்.மலர்விழி, ஒட்டன்சத்திரம்.
...........---------
கொசுக்களால் நோய் தொற்று
சின்னாளபட்டி பேரூராட்சியில் சாக்கடை சரிவர பராமரிப்பதில்லை. கழிவுகள் மேவிய நிலையில் அசுத்த நீர் நிரம்பி துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதோடு கொசுக்கள் உற்பத்தியாக நோய் தொற்றுக்கும் காரணமாகிறது .-ஆ.மயில்வாகனன், சின்னாளபட்டி.
...............----------
சேதமான பெயர் பலகை
திண்டுக்கல் எம்.எம்.கல்லுாரி அருகே ஆர்.எம். காலனி செல்லும் ரோட்டில் பெயர் பலகை சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது .போக்குவரத்துக்கு இடையூறு ஆக இருப்பதால் இதை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்கவேல், திண்டுக்கல்.
.................
-----------
தாழ்வான மீட்டர் பெட்டி
வடமதுரை மேட்டுப்பட்டி அத்திகுளத்துப்பட்டி ரோட்டில் மின் மீட்டர் பெட்டி தாழ்வான உயரத்தில் விபத்து ஆபத்தாக உள்ளது. சிறார்கள் விளையாடும் போது கவனகுறைவால் கை படும் போது விிபத்து அபாயம் உள்ளது .இதை சீரமைக்க வேண்டும். -- தங்கபாண்டி, வடமதுரை.
...........-----------
ரோடு சேதத்தால் விபரீதம்
திண்டுக்கல் திருச்சி ரோடு அரசு மருத்துவமனை அருகே பஸ் ஸ்டாப் பகுதியில் ரோடு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது .பயணிகள் காத்திருக்கும் பகுதி என்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. சேதமடைந்த ரோடை சீரமைக்க வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்.
..........----------