/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பை கொட்டியதால் தகராறு-: 2 பேர் கைது
/
குப்பை கொட்டியதால் தகராறு-: 2 பேர் கைது
ADDED : ஜூன் 16, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியசாமி வயது 42. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பையை கொட்டியுள்ளனர்.
இது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குப்பையை வீசிய நபர்கள் ஜோசப்ஆரோக்கிய சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஜோசப் ஆரோக்கியசாமியின் மனைவி அருள்வினோதா கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஜேசுசார்லஸ் 39,கிறிஸ்துராஜா 38 ஆகியோரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.