/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சொசைட்டிகளில் இல்லை பால் விற்பனை தேவை மாவட்ட நிர்வாக நடவடிக்கை
/
சொசைட்டிகளில் இல்லை பால் விற்பனை தேவை மாவட்ட நிர்வாக நடவடிக்கை
சொசைட்டிகளில் இல்லை பால் விற்பனை தேவை மாவட்ட நிர்வாக நடவடிக்கை
சொசைட்டிகளில் இல்லை பால் விற்பனை தேவை மாவட்ட நிர்வாக நடவடிக்கை
ADDED : ஜூலை 19, 2025 02:49 AM
குஜிலியம்பாறை: கிராமப்புறங்களில் உள்ள தனியார் பால் சொசைட்டிகளில் அப்பகுதி மக்களுக்கான பால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான மக்கள் கறவை மாடுகளை வளர்த்து கூட்டுறவு (ஆவின்) தனியார் பால் சொசைட்டிகளுக்கு பால் வழங்கி வருகின்றனர். கூட்டுறவு பால் சொசைட்டிகள் ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே உள்ளன. தனியார் பால் சொசைட்டிகள் அனைத்து ஊராட்சிகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.
கூட்டுறவு ,தனியார் பால் சொசைட்டிகளில் சுற்றுப்பகுதி மக்கள் சென்று தங்களின் வீடுகளுக்கு தேவையான பால் வாங்கி வந்தனர்.
தற்போது தனியார் பால் சொசைட்டிகளில் பொதுமக்களுக்கு பால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் வீட்டுக்கு தேவையான பாலை வாங்க முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பாக்கெட் பாலை வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொது மக்களுக்கான பால் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ராஜரத்தினம் கூறுகையில்,'' மாவட்ட அளவில் தனியார் பால் சொசைட்டிகளில் விவசாயிகள் கொண்டு வரும் பாலை கொள்முதல் மட்டுமே செய்கின்றனர்.
இதனால் அப்பகுதி மக்களால் அரை லிட்டர், ஒரு லிட்டர் தேவைப்பட்டாலும் தற்போது வாங்க முடிவதில்லை. நிர்வாகம் பொதுமக்களுக்கு தனியாக பால் விற்பனை செய்வதை தடை செய்துள்ளது என்கின்றனர். இதனால் பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொது மக்கள் கேட்டால் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.