ADDED : ஏப் 23, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆண்டு அறிக்கையை சங்க செயலாளர் எம்.சிவக்குமார் வெளியிட தலைவர் துரை பெற்றுக்கொண்டார்.
மாவட்ட அளவில் தடகள் வீரர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 5 முதல் மே 20 வரை நடத்தவும் , 6,8,10,12 வயது குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் ஜூன் 20ல் திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் நடக்கும், ஜூலை 13ல் மாநில மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் சிறந்த தடகள வீரர்களின் கல்லுாரி படிப்பு செலவு , விளையாட்டுக்கு தேவையான செலவுகளை தடகள சங்கமே ஏற்றுக்கொள்ள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.