/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட செஸ் போட்டி
/
ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட செஸ் போட்டி
ADDED : ஜன 08, 2024 05:35 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் கல்லுாரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. உடற்கல்வி இயக்குனர் ராஜபாண்டி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் பரிமளாகீதா தலைமை வகித்தார். மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். திண்டுக்கல், பழநி, வேடசந்துார், குஜிலியம்பாறை, வத்தலகுண்டு, நிலக்கோட்டை,ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 120க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 9,12,15,21 வயதுகளின் அடிப்படையில் போட்டிநடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட செஸ் அசோசியேசன் துணைச்செயலாளர் ரமேஷ்குமார் தலைமை நடுவராகவும் கோபிகிருஷ்ணன், ஜேம்ஸ்அரவிந்த், சரண், பிச்சைமணி துணைநடுவர்களாகவும் செயல்பட்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கான்பிடென்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் பொருளாளர் காளீஸ்வரிசெய்தனர்.