/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை மாவட்ட கிரிக்கெட் போட்டிகள்
/
நாளை மாவட்ட கிரிக்கெட் போட்டிகள்
ADDED : டிச 26, 2024 05:17 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையேயான எஸ்.எஸ்.ராஜன் கோப்பை சீனியர் பிரிவு கிரிக்கெட் போட்டிகள் டிச. 27 ம் தேதி தொடங்குகிறது.
இப்போட்டிகள் கோவை, திருப்பூர், திருவண்ணாமலை ,திண்டுக்கல்   4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இதில் 37 மாவட்டங்கள் விளையாடுகின்றன.
இப்போட்டிகள் அனைத்தும் 20 ஓவர்கள் கொண்ட பகல் ,இரவு போட்டிகளாக நடைபெறும்.
திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.ஏ.,  ரிச்மேன் மைதானங்களில் நடைபெறுகிறது. டி பிரிவில் திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் அணிகளும், ெஹச் பிரிவில் கடலுார், தென்காசி, தர்மபுரி, நாமக்கல்  மாவட்ட அணிகள் விளையாடுகின்றன.
திண்டுக்கல் மாவட்ட அணிக்கு செயின்ட் பிட்டர்ஸ் அணியின்முகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் அமர்நாத்தெரிவித்தார்.

