/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் நகரில் மாவட்ட நீதிபதி ஆய்வு சுகாதாரமற்ற கழிப்பறையை சரிசெய்ய கமிஷனருக்கு உத்தரவு

ADDED : அக் 24, 2024 07:25 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி முத்துசாரதா அப்பகுதியில் திடீர் ஆய்வுமேற்கொண்டதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யொட்டிய அபிராமி அம்மன் கோயில் பின்புறம் உள்ள சுகாதாரமற்ற கழிப்பறையை பார்த்த அவர், இதை 15 நாளில் சரி செய்ய மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில்பின்புறம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சுகாதாரமற்ற கழிப்பறையால் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இதன் சுகாதாரக்கேடுகளை 15 நாளில் சரி செய்து அப்பகுதியை துாய்மையாக மாற்ற மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பெண்கள் பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவிகள் மத்தியில் சட்டம் சம்பந்தபட்ட கருத்துக்களை பறிமாறினார்.