UPDATED : ஆக 08, 2026 10:47 PM
ADDED : ஆக 08, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. 6 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வடமதுரை என மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ, -மாணவிகள் 600 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆகர்ன தனுார் ஆசனம், ஏக பாத சிகந்தாசனம், சக்கராசனம், தனூர் ஆசனம், கர்ப்ப பிண்ட ஆசனம், மச்சியாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை மாணவ, -மாணவிகள் செய்து அசத்தினர்.
