/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அழகுபடுத்துதல் பெயரில் அலங்கோலம்; பயணிகள் அதிருப்தி
/
அழகுபடுத்துதல் பெயரில் அலங்கோலம்; பயணிகள் அதிருப்தி
அழகுபடுத்துதல் பெயரில் அலங்கோலம்; பயணிகள் அதிருப்தி
அழகுபடுத்துதல் பெயரில் அலங்கோலம்; பயணிகள் அதிருப்தி
ADDED : டிச 17, 2025 06:02 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி அழகு படுத்துதல் என்ற பெயரில் அலங்கோலமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பது ஏரி . 3 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் கிரானைட் கற்களுடன் நடைமேடை புதுப்பிப்பு, புதிய வேலி அமைத்தல், படகு குழாம், ஏரோட்டர், நீரூற்று, பயோ பிளாக் கற்கள் அமைத்தல், புதிய படகுகள் வாங்குதல், அலங்கார மின்விளக்கு, குதிரை, சைக்கிள் சவாரிக்கான தனித்தனி வழித்தடங்கள், பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை போன்ற அறிவிப்புகளுடன் இத்திட்டம் துவங்கப்பட்டது.
அறிவிப்பு மட்டும் மிகையான நிலையில் பணிகளில் தரம் என்பது அறவே இல்லை.
இதில் நடைமேடை பணிகள் ஆண்டு கணக்கில் மந்தகதியில் நடப்பதும், ஆங்காங்கே கட்டுமான குவியல், புதிதாக அமைக்கப்பட்ட எப்.ஆர்.பி., வேலிகளில் வெடிப்பு, அலங்கார மின் விளக்கு உறுதியற்ற நிலையில் சாய்வது என பணிகளின் தரத்திற்கு எடுத்து காட்டாக உள்ளது.
பணிகள் அரைகுறை நிலையில் முழுமை பெறாததால் கிரானைட் கற்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
நடைமேடை வடிவமைப்புகள் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி இல்லாமல் ஒழுங்கற்ற நிலையில் உள்ளன.துவக்கத்தில் எப்.ஆர்.பி., வேலி அமைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உற்பத்தி குறைவு காரணமாக அப்பணியும் கைவிடப் பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட வேலிகளும் சேதமடைந்து சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மொத்தத்தில் ஏரியை அழகுபடுத்துதல் என்ற பணி கண்துடைப்பு பணியாகவே கருதப்படுகிறது.
கட்டுமான குவியல்களின் குப்பை மேடாக ஏரி காட்சியளிளிக்கிறது.
படகு சவாரி, குதிரை, சைக்கிள், நடை பயிற்சி என இயற்கை சுற்றுச் சூழலால் தங்களது மன அழுத்தங்களை போக்க வருகை தரும் ஏரியாக இல்லாமல் அலங்கோலமாக காட்சியளிப்பது அனைத்தரப்பினரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
நகராட்சி கமிஷனர் சங்கர் கூறுகையில்,''ஏரியில் நடந்து வரும் பணிகள் தாமதமாகவும் தரமின்றி உள்ளது குறித்து ஒப்பந்ததாரர்க்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது.
இருந்த போதும் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வரு கிறோம்''என்றார்.

