/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90லட்சம் மோசடி: இருவர் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90லட்சம் மோசடி: இருவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90லட்சம் மோசடி: இருவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.90லட்சம் மோசடி: இருவர் கைது
ADDED : டிச 17, 2025 06:03 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழநி மேற்கு ரதவீதியை சேர்ந்தவர் போஸ்ராஜன். பழ வியாபாரம் செய்கிறார். இவருடைய 2 மகன்களும் படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு தாண்டிக்குடியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் அறிமுகம் கிடைத்தது. தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது, பணம் கொடுத்தால் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவருக்கு திண்டுக்கல் மாநகராட்சியிலும் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதை நம்பிய போஸ்ராஜன், பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சம் கொடுத்துள்ளார்.
பணி நியமன ஆணைகளை அவர்கள் கொடுத்து உள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வேலைக்கு சேர்வதற்கு சென்றபோது, அவை போலியானவை என தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.பி., பிரதீப்பிடம் போஸ்ராஜன் புகார் அளித்தார்.
குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி பரத், ரஞ்சித்குமார், அவருடைய மனைவி தரங்கினி, திருச்சி முசிறியை சேர்ந்த ஜெயபால், துறையூரை சேர்ந்த சிவா, சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சசிக்குமார், ஜெயபால் இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

