/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திசைமாறும் வரத்து நீர்; நிர்க்கதியில் நீர்நிலைகள்
/
திசைமாறும் வரத்து நீர்; நிர்க்கதியில் நீர்நிலைகள்
ADDED : அக் 30, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான அளவு நீர் நிலைகள் உள்ளன.உள்ளாட்சிகள், பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்படும் நீர் நிலைகள் பெரும்பாலும் தண்ணீர் வரத்துக்கு வழியின்றி வறண்டுதான் காணப்படுகிறது.
முறையாக துார்வாராததால் முட்புதர்கள் சூழ காடுகளாக காட்சி தருகின்றன.மழை நீர் வந்தாலும் தேக்க முடியாத நிலையே உள்ளது.வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சுருங்கி வரத்து நீரானது திசைமாறி செல்கிறது. இதை கவனிக்கவேண்டிய துறை அதிகாரிகள் தொடர் துாக்கத்திலே உள்ளனர்.

