ADDED : டிச 11, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டத்தில் இரு ஊராட்சிகளை இரண்டாகப் பிரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை ஊராட்சியில் 35 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சின்னழகு நாயக்கனுாரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சியை உருவாக்க கோரி காங்., தலைவர் தர்மர், சட்டசபை மனுக்கள் குழு தலைவரிடம் 2023ல் மனு அளித்தார்.
தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சிகள் பிரிப்பு பட்டியலில் ஆர்.கோம்பை ஊராட்சி இடம்பெற்றுள்ளது. இங்குள்ள சின்னழகு நாயக்கனூரை தலைமை இடமாக கொண்டு 17 கிரமங்களை உள்ளடக்கிய புதிய ஊராட்சி பிரிக்கப்பட்டுள்ளது.
* இதேபோல் ஆத்துார் சட்டசபை தொகுதியில் சித்தரேவு ஊராட்சியை இரண்டாகப் பிரித்து சிங்காரக் கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

