UPDATED : அக் 09, 2026 05:10 AM
ADDED : அக் 08, 2026 08:36 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.16 கோடி மதிப்பில் புதிய முகப்பு பகுதி, ஓட்டல், ஓய்வு அறைகள் என பல்வேறு விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ்மீனா நேற்று ஆய்வு செய்தார். தண்டவாளங்களின் திறன், மழைக்காலங்களில் ஏற்படும் குறைபாடுகள், நடைமேடை பகுதிகளில் விளக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
முதுநிலை கோட்ட மேலாளர் சிவா, முதுநிலை கோட்ட வணிக மேலாளர் கணேஷ், திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார், ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
