/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்; மேயரிடம் முறையீடு
/
மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்; மேயரிடம் முறையீடு
மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்; மேயரிடம் முறையீடு
மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்; மேயரிடம் முறையீடு
ADDED : செப் 27, 2024 07:19 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மேயர் இளமதியிடம் சி.ஐ.டி.யு., வினர் மனு அளித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்டச்செயலாளர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் மேயரிடம் அளித்த மனு: மாநகராட்சியில் அவுட்சோர்சிங் ஒப்பந்த தொழிலாளர்களாக பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். குறைந்த பட்ச கூலிச்சட்டத்தை அமலாக்காத நிலை நீடிக்கிறது. மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து பிரிவு சுகாதாரப் பிரிவு பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச கூலிச்சட்டம் அமலாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டிலும் பஞ்சப்படி விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திற்காக ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை கூட்டுறவு சங்கத்தில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் தவறியுள்ளது. ஊழியர்கள் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் கட்ட நோட்டிஸ் அனுப்பப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று சுகாதார ஊழியர்கள் கட்டவேண்டிய கடன், வட்டியை கட்ட முன் வர வேண்டும். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பாலசந்திரபோஸ், சி.ஐ.டி.யு., மாவட்டத் துணைச்செயலாளர் எ.பாண்டியன், சி.பி.எம்., நகரச்செயலாளர் அரபுமுகமது உடன் சென்றனர்.

