நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் பாரதி நகரில் இயங்கி வரும் ஞான ஒளி பார்வையற்றோர் , ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கத்தில் உள்ளவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர் காளியப்பன் வழங்கினார். தனி வட்டாட்சியர் (ஓய்வு) சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அய்யலுார் மோகன்ராஜ் மோனிஷா தம்பதியினர் மதிய விருந்து அளித்தார். பணியாளர் மணிமேகலை நன்றி கூறினார்.