ADDED : நவ 10, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அரசு திருமண மண்டபத்தில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் விஜயன், நகர செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா முன்னிலை வகித்தனர். தொகுதி மேற்பார்வையாளரும் மாநில சுற்றுச்சூழல் அணி இணை செயலாளருமான ரஞ்சன்துரை பேசினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, நகர அவைத் தலைவர் சரவணன் கலந்து கொண்டனர். இதுபோல் வத்திபட்டியிலும் முகவர்கள் கூட்டம் நடந்தது.