ADDED : ஏப் 24, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே வத்திபட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பாக ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி முன்னிலை வகித்தனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை பூத்வாரியாக செய்திடவும், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நத்தம் தொகுதி பொறுப்பாளர் ரஞ்சன்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் பவுர் கலந்து கொண்டனர்.