ADDED : நவ 02, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: வத்திபட்டி தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ,கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், தொகுதி பொறுப்பாளர் ரஞ்சன்துரை முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சக்கரபாணி காணொலி வாயிலாக ஆலோசனை வழங்கினார். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் இப்ரில்ஆசித், மாண வரணி சிவா கலந்து கொண்டனர்.

