ADDED : மார் 01, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : தி.மு.க., பூத் ஏஜென்ட்களுக்கான ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்யமூர்த்தி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சவுந்தர பாண்டியன், கரிகால பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி செயலாளர் ஜோசப்கோவில்பிள்ளை வரவேற்றார்.
தொகுதி பொறுப்பாளர் கம்பம் செல்வேந்திரன் முன்னிலையில் பூத் வாரியாக நடைபெற்ற, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் பூத் ஏஜென்ட்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
அம்மையநாயக்கனுார் பேரூராட்சி செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

