ADDED : பிப் 20, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வைகை அணையிலிருந்து திண்டுக்கல் நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் தி.மு.க.,வினர் பஸ் ஸ்டாண்ட் அருகே வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா தலைமையில், மாநகர தலைவர் முகமது, துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜான், நித்யா, அருள்வாணி, மார்த்தாண்டன், ஆரோக்கிய செல்வி, விஜயா பகுதி செயலாளர்கள் ஜானகிராமன், பஜ்லுல், சந்திரசேகர் பங்கேற்றனர்.

