ADDED : நவ 10, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க.,, வேடசந்தூர் பேரூர் தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் ஆரோன் தலைமை வகித்தார். தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், தேர்தல் மேற்பார்வையாளர் சல்மா பேசினர். வாக்காளர் சேர்க்கை முகாமில் நிர்வாகிகள் கூடுதலாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் மேகலா,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர்
கவிதாமுருகன், நிர்வாகிகள் மருதபிள்ளை, சரவணன், மணிமாறன், சுப்பிரமணி பங்கேற்றனர்.