ADDED : நவ 10, 2024 06:09 AM
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் , நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார்.
தொகுதி பார்வையாளர் மணி பேசினார். மாவட்ட அவைத்தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஆறுமுகம், துணை அமைப்பாளர் வேலுச்சாமி, நகராட்சித் தலைவர் திருமலைசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலு கலந்து கொண்டனர்.
கேதையுறும்பில் நடந்த வடக்கு ஒன்றிய கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், சத்திரப்பட்டியில் நடந்த தெற்கு ஒன்றிய கூட்டத்திற்கு தர்மராஜன், பொருளூரில் நடந்த தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய கூட்டத்திற்கு தங்கராஜ், மேற்கு ஒன்றிய கூட்டத்திற்கு சுப்பிரமணி தலைமை வகித்தனர்.
மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகானந்தம், ராஜ்குமார், சிவக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.
வேடசந்துார்: வேடசந்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க.,, வேடசந்தூர் பேரூர் தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் ஆரோன் தலைமை வகித்தார். தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், தேர்தல் மேற்பார்வையாளர் சல்மா பேசினர். வாக்காளர் சேர்க்கை முகாமில் நிர்வாகிகள் கூடுதலாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் மேகலா,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர்
கவிதாமுருகன், நிர்வாகிகள் மருதபிள்ளை, சரவணன், மணிமாறன், சுப்பிரமணி பங்கேற்றனர்.