ADDED : ஏப் 24, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பில் இல்லம் தோறும் மாணவர் அணி சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பாலு, பொன்ராஜ், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வீரமணி பேசினார். உறுப்பினர் செல்வராஜ், மாணவர் அணி அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், சரண்யா தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ் கலந்து கொண்டனர்.